கைத்துப்பாக்கிகள் தயாரித்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்


கைத்துப்பாக்கிகள் தயாரித்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்
x

ஓமலூர் அருகே கைத்துப்பாக்கிகள் தயாரித்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சேலம்

ஓமலூர்

ஓமலூர் அருகே கைத்துப்பாக்கிகள் தயாரித்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கிகள் தயாரிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டி பகுதியில் கடந்த மே மாதம் ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 2 கைத்துப்பாக்கிகள், கத்தி, முகமூடிகள் ஆகியவை இருந்தன.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த என்ஜினீயர் சஞ்சய் பிரகாஷ் (வயது 25), கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பி.பி.ஏ. பட்டதாரி நவீன் சக்கரவர்த்தி (25) என்பது தெரியவந்தது. நண்பர்களான இவர்கள், ஏற்காடு அடிவாரம் கருங்காலி என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கைத்துப்பாக்கிகள் தயாரித்து வந்தனர்.

என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்

:-அவர்கள் மக்களை காப்பாற்ற வேண்டும், இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துப்பாக்கி தயாரித்ததாகவும், வீரப்பன் மீது அதிக ஈர்ப்பு கொண்டதால் ஏதாவது ஒரு அமைப்பை தொடங்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த கபிலர் (21) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த இந்த வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் சேலம் வந்தனர். பின்னர் அவர்கள் ஓமலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று இந்த வழக்கை விசாரித்த போலீசாரிடம் விசாரணை நடத்தினர். சேலத்தில் முகாமிட்டுள்ள அவர்கள் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சஞ்சய் பிரகாஷ் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


Next Story