கைப்புறா எல்கை பந்தயம்
கைப்புறா எல்கை பந்தயம் நடைபெற்றது.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கைப்புறா எல்கை பந்தயம் நடைபெற்றது. நிகழ்ச்சியை குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பெரியமாடு, நடுமாடு, பூஞ்சிட்டுமாடு என 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் பேராவூரணி, முடச்சிக்காடு, கட்டுமாவடி, வீரராகவபுரம், அம்பாள்புரம், மங்களநாடு, விஜயபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டன. பெரியமாடு, நடுமாடு, பூஞ்சிட்டுமாடு என 3 பிரிவுகளிலும் 50-க்கும் மேற்பட்ட மாடுகளுடன் சாரதிகள் கலந்து கொண்டனர். நிர்ணயிக்கப்பட்ட பந்தய இலக்கினை நோக்கி மாடுகளை பிடித்துக் கொண்டு சாரதிகள் ஒன்றையொன்று முந்திச்சென்றனர். மாட்டை பிடித்துக் கொண்டு ஓடி 3 பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் சாரதிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.