விளையாட்டு விடுதிகளுக்கான கையுந்து பந்து போட்டி
கிருஷ்ணகிரியில் விளையாட்டு விடுதிகளுக்கான கையுந்து பந்து போட்டி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் விளையாட்டு விடுதிகளுக்கு இடையேயான கையுந்து பந்து போட்டி கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் 14, 17 மற்றும் 19 வயது ஆண்கள் பிரிவில் கிருஷ்ணகிரி, விழுப்புரம், அரியலூர் மாவட்ட விளையாட்டு விடுதிகளில் இருந்து மொத்தம் 80 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை தாசில்தார் விஜயகுமார் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்ட கைப்பந்து பயிற்றுனர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலக, விடுதி பயிற்றுனர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பாரதியார் தின, குடியரசு தின போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற அணிக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மகேஷ்குமார் செய்திருந்தார்.