காரில் கடத்த முயன்ற 150 கிலோ குட்கா பறிமுதல்


காரில் கடத்த முயன்ற 150 கிலோ குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து சிவகாசிக்கு கிருஷ்ணகிரி வழியாக காரில் கடத்த முயன்ற 150 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

பெங்களூருவில் இருந்து சிவகாசிக்கு கிருஷ்ணகிரி வழியாக காரில் கடத்த முயன்ற 150 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து காரில் குட்கா கடத்தி வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுட்டனர்.

இதனிடையே கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா 150 கிலோ இருப்பது தெரிய வந்தது.

டிரைவர் கைது

இதுகுறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேலப்பாளையபுரம் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 32) என்பதும், பெங்களூருவில் இருந்து சிவகாசிக்கு குட்காவை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர். மேலும் கார், குட்காவை பறிமுதல் செய்தனர்.


Next Story