ஓட்டலில் பதுக்கிய 16 கிலோ குட்கா பறிமுதல்
ஓசூரில் ஓட்டலில் பதுக்கிய 16 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி
ஓசூர்
ஓசூர் டவுன் போலீசார், ராயக்கோட்டை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் போலீசார் திடீரென சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட 16 கிலோ குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்டவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஓசூர் ரங்கோபண்டித அக்ரஹாரத்தை சேர்ந்த சின்னப்பன் (வயது56), ராஜா (46) ஆகியோர் ஓட்டலில் குட்காவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்்து அவர்களிடம் இருந்து ரூ.8,660 மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story