மளிகை கடையில் பதுக்கிய ரூ.1¼ லட்சம் குட்கா பறிமுதல்


மளிகை கடையில் பதுக்கிய ரூ.1¼ லட்சம் குட்கா பறிமுதல்
x

கிருஷ்ணகிரியில் மளிகை கடையில் ரூ.1¼ லட்சம் குட்கா பதுக்கி வைத்திருந்த உரிமையாளரை போலீசார் கைதுசெய்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மளிகை கடையில் ரூ.1¼ லட்சம் குட்கா பதுக்கி வைத்திருந்த உரிமையாளரை போலீசார் கைதுசெய்தனர்.

குட்கா விற்பனை

கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் டவுன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 5 ரோடு பகுதியில் ஒரு மளிகை கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்த கடையில் சோதனை செய்தனர். அங்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது.

உரிமையாளர் கைது

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து குட்கா வாங்கி வந்து கடையில் பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து கடையின் உரிமையாளர் தர்மராம் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடையில் இருந்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள 139 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள மளிகை, பெட்டிக்கடைகளில் சோதனை நடத்தினர்.


Next Story