குருதெட்சிணாமூர்த்தி கோவிலில் குருபூஜை விழா


குருதெட்சிணாமூர்த்தி கோவிலில் குருபூஜை விழா
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மடப்புரம் குருதெட்சிணாமூர்த்தி கோவிலில் குருபூஜை நடந்தது.

திருவாரூர்

திருவாரூர் அருகே மடப்புரத்தில் உள்ள குருதெட்சிணாமூர்த்தி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் உத்திர நட்சத்திர நாளில் குருபூஜை மகோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 188-வது ஆண்டு குருபூஜை மகோற்சவ விழா நடந்தது. முன்னதாக கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் சாமிக்கு பால், சந்தனம், விபூதி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சாமி வீதி உலா நடந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர


Next Story