கூடலூர் அணி வெற்றி


கூடலூர் அணி வெற்றி
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அணி வெற்றி

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பி டிவிஷன் லீக் போட்டியில் கூடலூர் அணி மற்றும் கூடலூர் ஆரஞ்சு அணி பங்கேற்று விளையாடியது. இந்த போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த ஆரஞ்சு அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 34.3 ஓவர்கள் மட்டும் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் சஞ்சீவ் ராம் 47 ரன்கள், சிவராஜ் 36 ரன்கள் மற்றும் வின்ஸ்டன் ஜேகப் 29 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து 210 பந்துகளில் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து விளையாடிய கூடலூர் அணி 32.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 193 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டியது. ஆரஞ்சு அணியின் பந்து வீச்சாளர் வின்ஸ்டன் ஜேகப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Next Story