கூடலூர் அரசு பள்ளி மாணவிகள் வெற்றி
மாநில அளவிலான சிலம்ப போட்டியில் கூடலூர் அரசு பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர்.
கூடலூர்
கோவையில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் கூடலூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவிகள் 3 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் சிலம்ப போட்டியில் முதல் மற்றும் 2-ம் இடங்களை பிடித்து வெற்றி பெற்றனர். மிக இளையோர் பிரிவில் 9-ம் வகுப்பு மாணவி தர்ஷினி ஒற்றைக்கம்பு, சுருள்வாள் வீச்சு போட்டிகளில் முதல் மற்றும் 2-ம் இடம் பிடித்தார். இளையோர் பிரிவில் 9-ம் வகுப்பு மாணவி பவித்ரா ஒற்றைக்கம்பு, சுருள் வாள் வீச்சு போட்டியில் முதல், 2-ம் இடங்களை பிடித்தார். அதே பிரிவில் பிளஸ்-1 மாணவி காயத்ரி மான் கொம்பு வீச்சு, ஒற்றைக்கம்பு போட்டிகளில் முதல் மற்றும் 2-ம் இடத்தை பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளை பாராட்டினர்.