ஜி.எஸ்.டி. வரி உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் மத்திய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்


ஜி.எஸ்.டி. வரி உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் மத்திய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
x

ஜி.எஸ்.டி. வரி உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் மத்திய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) கடுமையாக உயர்த்தியுள்ள மத்திய அரசின் செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏழை மக்கள் வாழவே முடியாத அளவுக்குச் சிறிதும் ஈவு, இரக்கமின்றிக் கண்மூடித்தனமாக வரியை உயர்த்தும் மோடி அரசின் கொடுங்கோன்மைப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

மத்திய அரசின் இத்தகைய ஜி.எஸ்.டி. வரி விதிப்பானது மாநில அரசுகளின் வரிவருவாயை பறித்து அவற்றின் கடன்சுமை அதிகமாகக் காரணமானதோடு, மக்களின் தலையில் கட்டுங்கடங்காத வகையில் விலை உயர்வு சுமையை ஏற்றி வாட்டி வதைக்கும் கொடுஞ்செயலையும் மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

மற்ற நாடுகளில் எல்லாம் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் விலைவாசி குறைந்துள்ளது. ஆனால், உலக அளவில் அதிக ஜி.எஸ்.டி. விதிக்கும் நாடாக இந்தியா இருந்தபோதும் இன்றுவரை தொடர்ந்து விலைவாசி உயர்ந்துவருவது வரிவசூல் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைத்து முறைப்படுத்த தவறிய மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணமாகும்.

எனவே, மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story