குரூப் 4 - மேலும் ஒரு சர்ச்சை.. வெளியான திடுக்கிடும் தகவல்
ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சி தகவலாக உள்ளது.
சென்னை,
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 10 ஆயிரத்து 117 காலி பணியிடங்களில் ஸ்டெனோ டைப்பிங் பிரிவில் மட்டும் 2 ஆயிரத்து 500 காலிப்பணியடங்கள் உள்ளன.
இந்த 2500 பணியிடங்களுக்கு 450 பேர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது தற்போதைய அதிர்ச்சி தகவலாக உள்ளது.
ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிக அளவில் தேர்வாகியுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. தேர்வு முடிவுகள் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்த நிலையில், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் ஏதும் எளிக்கவில்லை.
டிஎன்பிஎஸ்சி மௌனம் கலைத்து இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது தேர்வர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story