நிலக்கடலை அறுவடை பணி தீவிரம்


நிலக்கடலை அறுவடை பணி தீவிரம்
x
தினத்தந்தி 7 March 2023 12:15 AM IST (Updated: 7 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூர், பிள்ளைபெருமாள்நல்லூர் பகுதிகளில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூர், பிள்ளைபெருமாள்நல்லூர் பகுதிகளில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நிலக்கடலை அறுவடை பணி

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான சிங்கனோடை, கிடங்கல், மாமாகுடி, பிள்ளைபெருமாநல்லூர், வேப்பஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை 300 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரியாக அளவு பெய்ததால் நிலக்கடலை நல்ல விளைச்சல் ஏற்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் தற்போது நிலக்கடலை அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பருவமழை

இதுகுறித்து பிள்ளைபெருமாநல்லூர் விவசாயி அருணா ஜடேஸ்வரர் கூறுகையில், நாங்கள் ஆண்டு தோறும் நிலக்கடலை பயிரிடுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சரியான விலை கிடைக்காததால், குறைவாக சாகுபடி செய்தோம்.

ஆனால் இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்ததாலும், பம்புசெட், ஆயில் மோட்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி 300 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்தோம். நிலக்கடலை சாகுபடியைப் பொறுத்தவரை விதைப்பு, களை எடுத்தல், மண் அணைத்தல், விதை கடலை உடைத்தல் என பல வேலைகள் உள்ளன.

கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்

இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்ததால் விளைச்சல் அதிகமாகவும், நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளோம், மேலும் அரசு நிலக்கடலையை கொள்முதல் செய்வதற்கு கொள்முதல் நிலையம் அமைத்து விலை நிர்ணயம் செய்தால் நிலக்கடலை கூடுதலாக பயிரிட முடியும் என்றார்.


Next Story