திருவள்ளூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் - இன்று நடக்கிறது


திருவள்ளூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் - இன்று நடக்கிறது
x

திருவள்ளூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது.

திருவள்ளூர்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருவள்ளூர் கோட்ட செயற்பொறியாளர் கனகராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் திருவள்ளூர் பெரிய குப்பத்தில் உள்ள மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மின்துறை சம்பந்தமான புகார்களை நேரில் தெரிவித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story