மக்கள் நேர்காணல் முகாம்
மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் (பொறுப்பு) மதியழகன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். முகாமில் பட்டா மாற்றம் முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேளாண்மை இடுபொருள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் வேதாரண்யம் நகரசபை தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, தேர்தல் தாசில்தார் வேதையன், வட்ட வழங்க அலுவலர் ஜெயசெல்வம், தனி தாசில்தார் வடிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமில் 87 மனுக்கள் பெறபட்டு 37 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story