மக்கள் நேர்காணல் முகாம்
மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள குருக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா தலைமை தாங்கினார். கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். முகாமில் அத்திப்புலியூர், குருக்கத்தி, நீலப்பாடி, கூத்தூர், இலுப்பூர், ஆனைமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். முகாமில் இலவச வீட்டு மனைப்பட்டா 33 பேருக்கு வழங்கப்பட்டது. அதேபோல முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் உள்பட 68 பேருக்கு ரூ.16 லட்சத்து 22 ஆயிரத்து 885 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுதவிஜயரெங்கன், மண்டல துணை தாசில்தார் சந்திரகலா, வட்ட வழங்கல் அலுவலர் நீலாயதாட்சி, வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, ஊராட்சி தலைவர் வெண்ணிலா பாபு, வருவாய் ஆய்வாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர் முகிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.