சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்


சேலத்தில் இருந்து சென்னை செல்லும்  எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்
x

சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி

ஆலோசனை கூட்டம்

முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னை செல்ல உள்ளார். இவருக்கு கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகே மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிப்பது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

இதற்கு மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். செய்தி தொடர்பாளர் சமரசம், மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ், ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் முனிவெங்கடப்பன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசினார்.

சிறப்பான வரவேற்பு

கூட்டத்தில் சேலத்தில் இருந்து சென்னை செல்லும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகில் காலை 9.30 மணிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது. வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைக்க கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். மக்களின் அன்றாட பொருட்களின் விலையை பன்மடங்கு உயர்த்திய தி.மு.க. அரசை கண்டிப்பது. கல்வி நலனில் அக்கறை செலுத்தாத அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியை கண்டிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் கலைச்செல்வி, சாகுல்அமீத், பொதுக்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், இந்திராணி மகாதேவன், தகவல் தொழில் நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் ராஜசேகர், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தங்கமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வேலன் நன்றி கூறினார்.


Next Story