கல்லறை திருநாள் அனுசரிப்பு


கல்லறை திருநாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி,

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 2-ந்தேதி கிறிஸ்தவர்கள் சார்பில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்கள் அடக்கம் செய்த இடத்தில் உள்ள கல்லறைக்கு சென்று அங்கு பூ மற்றும் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் பிரார்த்தனை செய்வது வழக்கம். நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். காரைக்குடி கழனிவாசல் கல்லறை தோட்டத்தில் சகாயமாதா ஆலய பங்குத்தந்தை எட்வின்ராயன், உதவி பங்குத்தந்தை ஜேம்ஸ்ராஜா ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று கல்லறையில் மந்திரிக்கப்பட்டது. செஞ்சை கல்லறை தோட்டத்தில் புனித தெரசாள் ஆலய பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்று கல்லறையில் மந்திரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியக்குடி கல்லறை தோட்டத்தில் வளர்நகர் பங்குதந்தை தலைமையிலும், ஆவுடைப்பொய்கை பகுதியில் பங்குத்தந்தை ராஜமாணிக்கம் தலைமையிலும், மானகிரி கல்லறை தோட்டத்தில் பங்குத்தந்தை ஜூடு தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதேபோல் தேவகோட்டை, சிவங்கை, திருப்பத்தூர், காளையார்கோவில் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்திலும் கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.


Next Story