தமிழக முதல்-அமைச்சருக்கு 6 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு-அமைச்சர் சிவசங்கர் பேச்சு


தமிழக முதல்-அமைச்சருக்கு 6 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு-அமைச்சர் சிவசங்கர் பேச்சு
x

அரியலூர் வரும் தமிழக முதல்-அமைச்சருக்கு 6 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

அரியலூர்

அரியலூரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி தலைவர் இளையராஜா வரவேற்று பேசினார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் முன்னிலை வைத்தார். கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் சுபாசந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். மாவட்ட செயலாளரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் பேசும்போது கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 28-ந் தேதி திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு வருகிறார். பின்னர் அவர் ராசா எம்.பி. தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை அங்கிருந்து காரில் புறப்பட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகை மேட்டில் நடைபெற்று வரும் ஆகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிடுகிறார். இரவு அரியலூர் அரசினர் விடுதியில் தங்குகிறார். 29-ந் தேதி காலை 10 மணியளவில் செந்துறை சாலையில் உள்ள கொல்லாபுரம் என்ற இடத்தில் அரசு விழாவில் கலந்து கொண்டு அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். அரியலூர் வரும் தமிழக முதல்-அமைச்சருக்கு மாவட்ட எல்லையில் இருந்து மாளிகை மேடு வரை 6 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க வேண்டும். மேலும் விழாவை தமிழகத்திலேயே நமது மாவட்டம் சிறப்பாக செய்தது என்ற பெயரை வாங்க வேண்டும். அதற்கு கழகத்தில் உள்ள அனைத்து அணி பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வருகிற 27-ந் தேதி தி.மு.க. இளைஞர் அணி மாநில தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா சிறப்பாக மாவட்டம் முழுவதும் கொண்டாட வேண்டும். ஆதரவற்றவர்கள், முதியோர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, விளையாட்டு போட்டிகள் நடத்துவது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி சிறப்பாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் நகர செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.


Next Story