அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம்


அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2023 12:15 AM IST (Updated: 1 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெறும் என கலெக்டர் கூறினார்.

ராமநாதபுரம்

கிராமசபை கூட்டம்

ஊராட்சி சட்ட விதியின்படி காந்தி ஜெயந்தி அன்று கிராமசபை கூட்டம் நடைபெறும். அதன்படி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை(திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஊரக வளர்ச்சி ஊராட்சி இயக்குனரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கிராமசபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை. ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.

பொதுமக்கள் கருத்து

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், பிரதமர் குடியிருப்பு திட்டம், 2023-24-ம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினை பொதுமக்களுக்கு அறிவித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து கிராம சபையில் விவாதித்திட அரசு தெரிவித்துள்ளபடியால் பொதுமக்கள் இந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யுமாறு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story