காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம்


காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம்
x

மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியைெயாட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

வடகாடு

வடகாடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத்தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், மன்ற உறுப்பினர்கள், சுய உதவி குழுக்கள், கிராமமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் வடகாடு அருகேயுள்ள அணவயல், புள்ளான்விடுதி பகுதிகளிலும் ஊராட்சி மன்றத்தலைவர் புஷ்பராணி சின்னத்துரை தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருமயம்

திருமயம் அருகே ராராபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாண்டியம்மாள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் ஊராட்சி மன்ற வரவு, செலவு கணக்குகளை பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் வாசித்தார். அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் கொண்டு வந்த சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பொதுமக்களுக்கு வேளாண்மை துறை மூலம் என்னென்ன திட்டங்கள் என்று அலுவலர்கள் எடுத்துக் கூறினார்கள். கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ஜெயம் நன்றி கூறினார்.

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. புண்ணிய வயல் ஊராட்சியில் தலைவர் சுரேஷ் தலைமையிலும், பாண்டிபத்திரம் ஊராட்சியில் தலைவர் வீரபாண்டியன் தலைமையிலும், ஒன்றிய கவுன்சிலர் செந்தில் குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியார் முன்னிலையிலும் நடைபெற்றது. திருப்பெருந்துறை ஊராட்சியில் குளத்துக்குடியிருப்பு கிராமத்தில் ஊராட்சி தலைவர் சந்திரா ராஜ மாணிக்கம் தலைமையிலும், ஒன்றிய கவுன்சிலர் பாலசுந்தரி கூத்தையா முன்னிலையிலும் நடைபெற்றது. தாழனூர் ஊராட்சியில் தலைவர் முத்துக்காமாட்சி தலைமையிலும், கதிராமங்களம் ஊராட்சியில் தலைவர் கண்ணன் தலைமையிலும், கீழ்க்குடி வாட்டாத்தூர் ஊராட்சியில் தலைவர் சரவணன் தலைமையிலும், காவதுகுடி ஊராட்சியில் தலைவர் சித்ரா சோனமுத்து தலைமையிலும் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆவுடையார்கோவில் ஒன்றியம், திருப்பெருந்துறை ஊராட்சியில், ஊராட்சி தலைவர் சந்திரா ராஜமாணிக்கம் தலைமையிலும், ஒன்றிய ஆணையர் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் பாலசுந்தரி கூத்தையா முன்னிலையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றன.

ஆலங்குடி

திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.குளவாய்பட்டி ஊராட்சியில் தலைவர் நளினி பாரதிராஜா தலைமையிலும், கல்லாலங்குடி ஊராட்சியில் தலைவர் மலர் பழனிச்சாமி தலைமையிலும், வெண்ணாவல்குடி ஊராட்சியில் தலைவர் ராஜாங்கம் என்கிற ரெங்கசாமி தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருவரங்குளம் ஒன்றிய சத்துணவு மேலாளர் மனோகரன், ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஒருங்கிணைப்பாளர் விக்னேஸ்வரன், ஒன்றிய தொழில்நுட்ப உதவியாளர் விவேக், ஊராட்சி துணை தலைவர்கள் வீரம்மாள், முத்தையா, விமலா, செல்வநாயகி முத்துவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சியில் கோரிக்கையை ஏற்று விவாதங்கள் நடைபெற்றன. பின்னர் அந்தந்த ஊராட்சிகளில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஜான்சவரிமுத்து, ஜெனித்அரிஸ்டாட்டில், பாண்டியன், ஊராட்சி கவுன்சிலர் பெரியசாமி மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அரிமளம்

அரிமளம் ஒன்றியம், கடியாபட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரிசோமசுந்தரம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் பெரியசாமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் குமரேசன் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நிதி வரவு செலவினம் அறிக்கை, தணிக்கை அறிக்கை, ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான பாரத பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், தெருவிளக்கு, பாசன வாய்க்கால் தூர்வாருதல், மடைகள் திறந்து விடுதல், சாலை வசதி செய்து தர கோருதல் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் முன்னுரிமை அடிப்படையில் பணிகள் ஒவ்வொன்றாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதன் பின்னர் தீர்மானங்கள் அனைத்தும் வாசிக்கப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள், கிராமமக்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், கடியாபட்டி அரசு ஆரம்ப சுகாமாவட்டத்தில் காந்தி ஜெயந்தியைெயாட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.தார நிலைய டாக்டர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முனசந்தை ஊராட்சி

முனசந்தை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராம ஊராட்சியின் நிதி செலவினம் குறித்தும், தணிக்கை அறிக்கை குறித்தும், மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் மருத்துவத்துறை மூலம் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, திட்ட இயக்குனர் கவிதா பிரியா, வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி, ஒன்றிய குழு தலைவர் மேகலா முத்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story