அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்
குடியரசு தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் இணைந்து குடியரசு தினமான வருகிற 26-ந் தேதி பகல் 11 மணிக்கு தவறாமல் கிராமசபை கூட்ட வேண்டும்.
மேலும், இக்கிராம சபைக்கூட்டத்தில் ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2022 முடிய கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதிக்கப்பட வேண்டும். மேற்படி கிராம சபைக்கூட்டங்களில் தாசில்தார்கள் பார்வையாளர்களாக கலந்துக்கொள்ள வேண்டும். மேலும், கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.