241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்


241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
x

உள்ளாட்சி தினத்தையொட்டி 241 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

உள்ளாட்சி தினத்தையொட்டி 241 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிராமசபை கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளிலும் நாளை (செவ்வாய்க்கிழமை) உள்ளாட்சி தினத்தன்று கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் 2021-2022 மற்றும் 2022-2023-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விவரம் குறித்து விவாதித்தல், கலைஞர் வீடு வழங்கும் திட்டம்-2010 மறுகணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், மகளிர் திட்டமிடல் இயக்கம் குறித்து விவாதித்தல், இணையவழி வீட்டுவரி, சொத்து வரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உருவாக்குதல் மற்றும் சுழற்சி முறையில் நிர்வாகிகளை மாற்றம் செய்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

பிளாஸ்டிக் இல்லாத கிராமங்கள்

2021-22 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்களில் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவின அறிக்கை பயனாளிகள் விவரம், நிதி பயன்பாடு குறித்து அறிக்கை அளித்தல், பிளாஸ்டிக் இல்லாத கிராமங்களை உருவாக்குதல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சாத்தியமான பணிகள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ளுதல், தற்போது உள்ள பணி தொகுப்பின் முன்னேற்றத்தினை பகிர்ந்து கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்று, கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடர்பான விவரங்களை விவாதிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story