கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தொடக்கம்


கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தொடக்கம்
x

கடையநல்லூரில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் யூனியன் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தொடக்க விழா கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் 16 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்றனர்.

இதன் தலைவராக போகநல்லூர் பஞ்சாயத்து தலைவி குரு சண்முகப்பிரியா தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக கொடிக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் வழக்கறிஞர் உடையாா், பொருளாளராக நயினாரகரம் பஞ்சாயத்து தலைவர் முத்தையா என்ற முத்து, துணைத் தலைவராக புதுக்குடி பஞ்சாயத்து தலைவி கஸ்தூரி இன்பராஜ், ஒருங்கிணைப்பாளராக புன்னையாபுரம் திலகவதி கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய முழு பங்கு தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் ஊராட்சி செயலாளரை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிைறவேற்றப்பட்டது.



Next Story