ரெயிலில் அடிபட்டு அரசு ஊழியர் பலி


ரெயிலில் அடிபட்டு அரசு ஊழியர் பலி
x

வடமதுரை ஏ.வி.பட்டி சாலையில் உள்ள ெரயில்வே கேட் அருகே நேற்று முன்தினம் ரெயிலில் அடிபட்டு அரசு ஊழியர் பலியானர்.

திண்டுக்கல்

வடமதுரை ஏ.வி.பட்டி சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே நேற்று இரவு ரெயிலில் அடிபட்டு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், வடமதுரை ஆதம்ஸ் நகரை சேர்ந்த முனீஸ்வரன் (வயது 26) என்று தெரியவந்தது. பொறியியல் பட்டப்படிப்பு படித்த இவர், வத்தலக்குண்டுவில் தமிழக நீர்வளத்துறையில் பணிபுரிந்து வந்தார். திருமணம் ஆகாத இவர், தனது தாய் முத்துலட்சுமி மற்றும் தம்பியுடன் வடமதுரையில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் ரெயிலில் அடிபட்டு இறந்திருப்பது தெரியவந்தது.


Related Tags :
Next Story