நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் காயம் அடைந்தவருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

சாயல்குடி அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் சுதாகனி (வயது 27). இவர் கடந்த 15 ஆண்டுக்கு முன்பு சாயல்குடி பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும்போது அரசு பஸ்சில் பயணம் செய்தார்.அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் கை,காலில் காயம் ஏற்பட்டது. இதைப்பற்றி சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விபத்து வழக்கில் நஷ்டஈடு கேட்டு பரமக்குடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுதாகனிக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் வட்டி, செலவு தொகையுடன் ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 916 வழங்க உத்தரவிட்டது. இந்த வழக்கு முதுகுளத்தூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமார் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார் அதன் அடிப்படையில் வக்கீல் வேலுச்சாமி, கிளார்க் பாண்டி தவமணி ஆகியோர் அரசு பஸ்சை ஜப்தி செய்து முதுகுளத்தூர் ேகார்ட்டில் ஒப்படைத்தனர்.இதையெடுத்து உடனடியாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடான ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 916-க்கான காசோலையை செலுத்தி பஸ்சை மீட்டனர்.


Related Tags :
Next Story