அரசுப்பள்ளி ஆசிரியர் தீக்குளிப்பு
தீக்குளித்த அரசு பள்ளி ஆசிரியை தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 30 அடி வீதியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 40). இவர் நரிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே ராஜாமணி என்பவர் குடியிருந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்கு குழி தோண்ட ராஜாமணி முயன்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அழகர்சாமி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்தார். உடனே அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அழகர்சாமியை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சோ்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு வரப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.