அரசு பள்ளி மாணவி 2 கைகளிலும் எழுதி சாதனை


அரசு பள்ளி மாணவி 2 கைகளிலும் எழுதி சாதனை
x

அரசு பள்ளி மாணவி 2 கைகளிலும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

புதுக்கோட்டை

கீரமங்கலம் அருகே சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்த மதியானந்தன் மகள் திரவியா. இவர், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த மாணவி ஒரே நேரத்தில் இரு கைகளாலும் எழுதி அசத்தி வருகிறார். அதாவது இரு கைகளிலும் பேனா அல்லது சாக்பீஸ் பிடித்து ஒரே வார்த்தையை வலது கையில் இடமிருந்து வலது பக்கமாகவும் (சாதாரணமாக படிக்கும் வகையில்) இடது கையில் வலமிருந்து இடமாகவும் (கண்ணாடியில் காட்டினால் எளிமையாக படிக்கலாம்) எழுதுகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இது போல எழுதி வருகிறார். இந்த நிலையில் பள்ளி நிகழ்ச்சிக்கு வந்திருந்த அமைச்சர் மெய்யநாதன் மாணவிகளிடம் படிப்பை தாண்டி யாருக்கெல்லாம் தனித்திறன்கள் உள்ளது என்று கேட்டார். அப்போது மாணவி திரவியா ஒரு பேப்பர் 2 பேனாவுடன் சென்று அமைச்சர் முன்னிலையில் இரு கைகளாலும் வேகமாக எழுதி காட்டினார். இதையடுத்து அமைச்சர் மெய்யநாதன் மாணவியை பாராட்டி சால்வை அணிவித்தார். தமிழ், ஆங்கிலத்தை இரு கைகளிலும் ஒரே நேரத்தில் இரு பேனாக்களில் எழுதி வரும் மாணவியை ஆசிரியர்கள், மாணவிகள் பாராட்டினர்.


Next Story