அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு


அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
x

அரவக்குறிச்சி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ெதாடங்கியது.

கரூர்

கலந்தாய்வு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 2023-24-ம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. நேற்று ஒய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது.

இதில், விளையாட்டு துறையில் மாநில அளவில் குத்துச் சண்டை போட்டியில் தேர்ச்சி பெற்ற மாணவர் முதலாவது மாணவராக வணிகவியல் துறையில் சேர்க்கப்பட்டார். கலந்தாய்வில் பங்கு பெற்று சேர்க்கை பெற்ற மாணவருக்கு சேர்க்கைக்கான சான்றிதழை கல்லூரி முதல்வர் வசந்தி வழங்கினார்.

8-ந்தேதி வணிகவியல் பாடம்

அப்போது, கணினி அறிவியல் துறை தலைவர் பானுமதி, ஆங்கிலத் துறை தலைவர் பார்த்திபன், வணிகவியல் துறைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனா.

ஜூன் 6-ந்தேதி இளங்கலை தமிழ் (பி.ஏ. தமிழ்), இளங்கலை ஆங்கிலம் (பி.ஏ.ஆங்கிலம்) ஆகிய பாடங்களுக்கும், ஜூன் 7-ந்தேதி இளம் அறிவியல் கணிதம் (பி.எஸ்.சி. கணிதம்), கணினி அறிவியல் (பி.எஸ்.சி. கணினி அறிவியல்) பாடங்களுக்கும், ஜூன் 8-ந்தேதி வணிகவியல் (பி.காம்.) பாடத்திற்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.


Next Story