கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினவிழா


கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினவிழா
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினவிழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் நாட்டு நல பணித்திட்ட அணிகள் 49 மற்றும் 50 ஆகியவை சார்பாக 9-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ஜான்சி ராணி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட சித்தா மருத்துவர் ராஜ செல்வி கலந்து கொண்டு மாணவிகளுக்கு உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள யோகாவின் அவசியம் குறித்து பேசினார். மேலும், இந்த ஆண்டிற்கான சர்வதேச யோகா தினம் "வசுதைவ குடும்பகத்துக்கான யோகம்" என்ற கருப்பொருள் பயிற்சியுடன், மாணவருக்கு ஆரோக்கியத்தையும், நோயில்லா வாழ்க்கை வாழ ஆரோக்கியமான உணவு முறை மற்றும் தினமும் யோகா செய்தால் மகிழ்ச்சியோடு எவ்வாறு வாழலாம் என்பது குறித்தும் விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஜான் மோசஸ், பிச்சுளை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரியா, திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சுமங்கலி, ஆழ்வார்திருநகரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் எஸ்தர் யுனிஸ், சுகாதார ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். 3-ம் ஆண்டு மாணவி ரித்திகா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியை ஷீலா ஜெபஸ்டா, நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் ஜான்சி ராணி, சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story