கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்விலங்கியல் பேரவை தொடக்கவிழா


கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்விலங்கியல் பேரவை தொடக்கவிழா
x
தினத்தந்தி 9 Sept 2023 12:15 AM IST (Updated: 9 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் விலங்கியல் பேரவை தொடக்கவிழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில், விலங்கியல் பேரவை தொடக்கிவிழா நடந்தது. இவ்விழாவில் தூத்துக்குடி ஸ்நோவ்ஸ் கியரிங் சென்டர் நிறுவனர் டாக்டர் டார்வின் கலந்து கொண்டு, 'காதுகளின் பாதுகாப்பு' என்ற தலைப்பில், காதுகளின் அமைப்பு, பயன்பாடு, பாதுகாப்பு, குறைபாடும் சரிசெய்யும் வழிமுறைகளும் மற்றும் காதுகளில் பொருத்தும் கருவிகள் போன்றவை குறித்து மாணவிகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். உதவிப் பேராசிரியை சு.ராதா வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர் பி.குமுதா மற்றும் பேராசிரியைகள் செய்திருந்தனர். பேரவை மன்ற உறுப்பினர் பி.சரண்யா நன்றி கூறினார்.


Next Story