தமிழக அரசின் திட்டங்களை கவர்னர் முடக்க முயற்சிக்கிறார்; வைகோ பேட்டி


தமிழக அரசின் திட்டங்களை கவர்னர் முடக்க முயற்சிக்கிறார்;  வைகோ பேட்டி
x

தமிழக அரசின் திட்டங்களை கவர்னர் முடக்க முயற்சிக்கிறார் என்று வைகோ கூறினார்.

திருச்சி

செம்பட்டு:

திருக்குறள் பற்றி தவறாக பேசுகிறார்

சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் நேற்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வந்தார். அவர், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது;-

திருக்குறள் குறித்து தமிழக கவர்னர் ரவி திரும்பத் திரும்ப தவறாக பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு திருக்குறள் பற்றிய ஆழ்ந்த ஞானம் கிடையாது. இந்துத்துவ கருத்துகளை எப்படியும் தமிழ்நாட்டில் திணித்து விட வேண்டும் என்று சங்பரிவார் இயக்கங்களுக்கு துணையாக கவர்னர் செயல்படுகிறார். திருக்குறளைப் பற்றி ஆல்பர்ட் சுவைட்சரை விடவா ஆராய்ச்சி செய்ய முடியும். உலகிலேயே இதற்கு நிகரான நூல் ஒன்றும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

திட்டங்களை முடக்க முயற்சி

பவுத்த மதத்தில் கூட இப்படிப்பட்ட கருத்துகள் இல்லை. அப்படிப்பட்ட உயர்ந்த கருத்துகளை திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார். அதைப்போல ஜி.யு.போப்பும் சரியான முறையில் மொழி பெயர்த்து இருக்கிறார். தவறாக மொழி பெயர்க்கவில்லை. ஆனால் திட்டமிட்டு ஒரு கூட்டம் வேலை செய்வதற்கு, கவர்னர் துணை போவது துரதிஷ்டவசமானது.

ேமலும் திராவிட மாடல் அரசு அனுப்பிய 14 மசோதாக்களுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். அவர் தமிழக அரசின் திட்டங்களை முடக்க முயற்சிக்கிறார். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவதாக பா.ஜ.க. தலைவர்கள், தங்கள் மனம் போன போக்கிற்கு பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் காரில் தஞ்சை மாவட்டம் பேராவூரணிைய நோக்கி புறப்பட்டு சென்றார்.


Next Story