ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் இன்றைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்


ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் இன்றைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
x

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் இன்றைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு கவர்னர் இன்றைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில்,

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் அரசியலமைப்பு சட்ட விதிகளின்படி இன்றுடன் காலாவதியாகிறது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதல் கிடைக்காததே இந்த நிலைக்கு காரணம்.

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213(2)(ஏ)-இன்படி சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகி விடும். அக்டோபர் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூடி இன்றுடன் 6 வாரங்கள் நிறைவடைவதால் அவசரசட்டம் காலாவதியாகிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை காலாவதியானால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட்டம் மீண்டும் முழுவீச்சில் தொடங்கிவிடும். தமிழ்நாட்டில் கடந்த 15 மாதங்களில் 32 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதை தடுக்க ஆன்லைன் சூதாட்டத் தடை மிகவும் அவசியம்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் சட்டப்பேரவையில் இயற்றி ஆளுனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆளுனரின் ஐயங்களுக்கும் அரசு தெளிவான பதில் அளித்திருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனர் இன்றைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



Next Story