புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல்


புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல்
x
தினத்தந்தி 10 July 2023 2:56 PM IST (Updated: 10 July 2023 3:12 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் மாதம் ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தலா ரூ.300 மானியம் வழங்கப்படும் என்றும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டை தாரர்களுக்கு சிலிண்டருக்கு ரூ.150 மானியம் வழங்க துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் உடனடியாக அமலுக்கு வரும் எனவும், இந்த மானியத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.


Next Story