கவர்னர் பதவியை தூக்க வேண்டும் - சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.
சீமான் கூறியதாவது:-
மக்களாட்சி என்பதற்கு ஏற்ப இங்கு என்ன நடக்கிறது. அனைத்தும் தேர்தல் அரசியலும், கட்சி அரசியலும்தான் நடக்கிறது. மக்களுக்கான அரசியல் எங்கு நடக்கிறது. இங்கு சேவை அரசியல், செயல் அரசியல் இருக்கிறதா? செய்தி அரசியல் மட்டும்தான் இருக்கிறது.
கவர்னரை மாற்ற வேண்டும் என்கின்றனர். ஆனால் கவர்னர் பதவியை தூக்க வேண்டும் என்கிறேன். கவர்னர் பதவி அவசியம் இல்லை. பள்ளி நேரங்களில் அதிக பஸ்களை இயக்க வேண்டும். நகர்புறங்களில் பஸ்களை தவிர்த்து விட்டு மினி பஸ்களை அதிகம் விடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம் நிருபர்கள், "உலக கோப்பையை இந்தியா வெல்லுமா?" என்று கேட்டதற்கு, நடிகர் விஜய் பாணியில், "கப் முக்கியம் பிகிலு" என்று கூறிய சீமான், "முன்பு கிரிக்கெட்டை ரசித்து பார்த்தேன். தற்போது இல்லை. வீரர்களை எப்போது ஏலம் எடுத்தார்களோ அப்போதே அது ஆன்லைன் சூதாட்டம் ஆகிவிட்டது" என்றார்.