அரசியல் சாசனத்திற்கு துரோகம் செய்யும் கவர்னர்: திமுக எம்.பி. டி.ஆர்.பாலு விமர்சனம்
அரசியல் சாசனத்திற்கு கவர்னர் துரோகம் செய்வதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.
சென்னை,
திமு.க. எம்.பி. டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
அரசுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பேசி வருவது அரசியல் சாசனத்திற்கு அவர் செய்யும் துரோகம். பாஜக தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி வதந்திகளை பரப்புகிறார்களோ, அவர்களுக்கு போட்டியாக தமிழக பாஜகவின் தலைவராகும் ஆசையில் கவர்னரும் பொய்யாகவே பேசி வருகிறார்.
மருதுபாண்டியர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்கமுடியாது என ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியபோது இந்த கவர்னர் ரவி எங்கே போனார்.
தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, மொழிக்கு எதிராக கவர்னர் தொடர்ந்து உளறிக்கொண்டிருக்கிறார். துரோகம் செய்வதை கைவிட்டு விட்டு திருக்குறளுக்கு ஏற்ப கவர்னர் நடக்கவேண்டும்.
கவர்னர் பதவியை விட்டு விலகி பாஜக-வின் தலைவராகவோ, அல்லது ஆர்.எஸ்.எஸ். தலைவராகவோ ஆகட்டும். நியமனப் பதவியில் வெட்கமின்றி உட்கார்ந்துகொண்டு கூச்சமில்லாமல் பொய்களை பேசுகிறார்." இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.