அரசு வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், டிரைவர்களின் தர ஊதிய முரண்பாட்டை களைத்து புதிய ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், டிரைவர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், டிரைவர் காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். பொருளாளர் விஜய் வரவேற்றார். இதில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்திருந்தனர்.
Related Tags :
Next Story