இயற்கை ஓவியத்தால் கண்களை கவரும் அரசு பள்ளி


இயற்கை ஓவியத்தால் கண்களை கவரும் அரசு பள்ளி
x

இயற்கை ஓவியத்தால் கண்களை கவரும் அரசு பள்ளி

நாமக்கல்

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலத்தில் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் இந்த பள்ளியில் வகுப்பறைகளுக்கு முன் பகுதியில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு பசுமை சூழல் நிரம்பி காட்சியளிக்கிறது.

மேலும் பள்ளியின் ஒரு பகுதியில் கொல்லிமலையில் உள்ள ஒரு வயல்வெளி போல இயற்கை சார்ந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. அந்த ஓவியத்தின் அருகில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன. இந்த மரக்கன்றுகள் ஓவியத்துடன் இயற்கையாக அமைந்து காட்சியளிப்பது அங்கு செல்வோர் கண்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது. பள்ளி வளாகத்தை சுற்றிலும் மரங்களை பராமரிக்க பள்ளி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Next Story