தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்கள் பணி செய்யும் இடத்துக்கே சென்று புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் தெரிவித்தார்


தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்கள் பணி செய்யும் இடத்துக்கே சென்று புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக,  அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் தெரிவித்தார்
x
தினத்தந்தி 20 Oct 2023 12:15 AM IST (Updated: 20 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்கள் பணி செய்யும் இடத்துக்கே சென்று புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் தெரிவித்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்கள் பணி செய்யும் இடத்துக்கே சென்று புற்றுநோய் பரிசோதனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, அரசு ஆஸ்பத்திரி டீன் சிவக்குமார் தெரிவித்தார்.

விழிப்புணர்வு

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு டீன் சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது, தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய்க்கான சிறப்பு அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க சிகிச்சை, புற்று நோய்க்கான மருந்து செலுத்தும் பிரிவு உள்ளிட்ட அனைத்தும் உள்ளன. இதனால் நோயாளிகள் புற்றுநோய் சிகிச்சைக்காக வேறு எங்கும் செல்ல வேண்டியது இல்லை. நோயை கண்டுபிடிக்கும் வகையில் தொற்றா நோய் கண்டுபிடிக்கும் பிரிவும் உள்ளது. அங்கு பரிசோதனை செய்து மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றை கண்டுபிடிக்கும் வசதியும் உள்ளது. மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் மேமோகிராம் கருவியும் நம் ஆஸ்பத்திரியில் உள்ளது.

புற்றுநோய் கண்டறிதல்

மேலும் ஒரு புதிய முயற்சியாக பெண்கள் கூட்டமாக வேலை செய்யும் இடத்துக்கே சென்று நோயாளிகளை கண்டறியும் ஒரு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தமிழகத்திலேயே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில்தான் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஒரு வேன் மூலமாக அதற்கான ஸ்கேன் செய்யப்படும் கருவியோடு ஊழியர்கள், பெண்கள் அதிகம் வேலை செய்யும் இடத்துக்கே சென்று பரிசோதனை செய்கின்றனர். ஸ்கேன் செய்த பின்பு அவர்களுக்கு புற்றுநோயின் அறிகுறிகள் இருக்குமானால் அவர்களை உடனடியாக சிகிச்சைக்கு வருமாறு அழைத்து அவர்களை முற்றிலும் குணமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், துணை கண்காணிப்பளர் குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு டாக்டர் அமுதன், கதிரியக்க சிகிச்சை பிரிவு தலைமை டாக்டர் லலிதா, மருந்து செலுத்தும் பிரிவு தலைவர் டாக்டர் காந்திமதி மற்றும் மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story