சுதந்திர போராட்ட பவள‌ விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்


சுதந்திர போராட்ட பவள‌ விழாவை  அரசு விழாவாக கொண்டாட வேண்டும்
x

சுதந்திர போராட்ட பவள‌ விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

தர்மபுரி

சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் வந்தே மாதரம் யாத்திரை வேலூர் கோட்டை தொடங்கி திருப்பூர் வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ள இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் சுதந்திர போராட்ட தியாகிகளை நேரில் சந்தித்தும், சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தியும் வருகிறார். இந்த நிலையில் அவர் தர்மபுரி அன்னசாகரத்தில் வசிக்கும் 92 வயதான சுதந்திர போராட்ட தியாகி சிவகாமியம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அந்த பெண் தியாகிக்கு அர்ஜுன் சம்பத் பாத பூஜை செய்து வணங்கினார். நிகழ்ச்சியில் மாநில செயலாளர் அசோக், மாநில செய்தி தொடர்பாளர் இறையருள் கவுரிசங்கர், மாநில பொதுச்செயலாளர் செந்தில், மாநில துணைத்தலைவர் முத்து அரங்கசாமி, கோட்ட பொறுப்பாளர் சீனிவாசன், மாவட்ட தலைவர் வெங்கடமணி, ஊடக செயலாளர் ஹரிஹரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இந்திய நாட்டின் விடுதலை நாளை போற்றும் வகையில் தற்போது பவள விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் வந்தே மாதரம் யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசு சுதந்திர போராட்ட பவள‌ விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். விடுதலை போராட்ட‌ தியாகிகளின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும். விடுதலை போராட்ட‌ வீரர்களின் படங்களை ஆவணப்படுத்தும் போது அதில் மொழிப்போர் தியாகிகளின் படத்தை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.


Next Story