உள்ளாட்சி பணியாளர்களுக்கு கணினி மூலம் ஊதியம் வழங்க வேண்டும்


உள்ளாட்சி பணியாளர்களுக்கு கணினி மூலம் ஊதியம் வழங்க வேண்டும்
x

உள்ளாட்சி பணியாளர்களுக்கு கணினி மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என அரசு பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் பேட்டி அளித்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு நிர்வாகத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு கணினி மூலம் ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் குறைந்த ஊதியம் பெறுபவர்களுடைய நிலைமை மிக மோசமாக உள்ளது. குறிப்பாக ஊராட்சி நிர்வாகத்தில் பணியாற்றக்கூடிய தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மாதா மாதம் ஊதியம் கிடைப்பதில்லை. அது மட்டும் இன்றி ஊதியத்தை வலியுறுத்தி கேட்டால் வேலையை விட்டு சென்று விடுங்கள் என்று மிரட்டக்கூடிய போக்குகள் ஆங்காங்கே தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஒரு சில நிர்வாகங்களில் தேவையான ஆட்களுக்கு மேலாக நிர்வாகத்திற்கு வேண்டியவர்களை போட்டு கொடுக்கின்ற ஊதியத்தை குறைத்துக் கொடுக்கக்கூடிய சூழ்நிலையும் உருவாக்கி வருகிறது. இதனால் உள்ளாட்சி நிர்வாகத்தில் பணியாற்றக் கூடிய சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணியாளர்கள் மாதந்தோறும் ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கணினி ஊராட்சிகளை கணினி மயமாக்கும் பணிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த முடிவினை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் வரவேற்கிறது. அந்த கணினி மயமாக்கல் பணிகளில் ஒவ்வொரு ஊராட்சிகளும், பேரூராட்சிகளும் உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் அடிப்படை பணிகளை கவனிக்கக்கூடிய தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணியாளர்கள் அனைவருக்கும் கணினி மூலம் ஊதியம் வழங்கக்கூடிய ஒரு முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story