அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை ரூ.50 கோடி வரி ஏய்ப்பு..? - வெளியான பரபரப்பு தகவல்


அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை ரூ.50 கோடி வரி ஏய்ப்பு..? - வெளியான பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 13 Oct 2022 9:53 AM IST (Updated: 13 Oct 2022 10:57 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் பெரியார் நகரை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வந்தார். மாணிக்கம் மரணமடைந்தையடுத்து அவரது மகன் பாண்டித்துரைக்கு கருணை அடிப்பைடையில் அரசு ஒப்பந்ததாரர் பணி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.

தமிழகம் முழுவதும் கடந்த ஆட்சி காலத்தில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடி மேலாக பணிகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரைக்கு சொந்தமான இடங்களில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை தற்போது 2-வது நாளாக நீடித்து வருகின்து. அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீடு, அலுவலகம் போன்ற 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். சுமார் ரூ.50 கோடிக்கு வரி ஏய்ப்பு நடைபெற்று உள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நாளையும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story