அரசு கல்லூரி ஆண்டு விழா


அரசு கல்லூரி ஆண்டு விழா
x

மானூர் அரசு கல்லூரி ஆண்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. ராணி அண்ணா கல்லூரி முதல்வர் மைதிலி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் பாரதி முன்னிலை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். உதவி பேராசிரியர் மங்கையர்க்கரசி வரவேற்று பேசினார்.

மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், மின்னல் அறக்கட்டளை நிறுவனர் மில்லத் இஸ்மாயில், பிள்ளையார்குளம் பஞ்சாயத்து தலைவர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, கல்வி, விளையாட்டு மற்றும் நுண்கலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா நிகழ்வுகளை தமிழ்துறை உதவி பேராசிரியர் இந்திரா தொகுத்து வழங்கினார்.


Next Story