மூவலூர் மார்க்க சகாயசாமி கோவிலில் கோபூஜை
சனிப்பிரதோஷத்தையொட்டி மூவலூர் மார்க்க சகாயசாமி கோவிலில் கோபூஜை நடந்தது
குத்தாலம்:
குத்தாலம் அருகே மூவலூரில் மார்க்க சகாயசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாத சனிப்பிரதோஷத்தையொட்டி கோபூஜை நடத்தி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அம்பாள், மார்க்கசகாயசாமி, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலின் உள்பிரகாரத்தில் உலா உற்சவம் நடந்தது. திருவெண்காடு அருகே அன்னப்பன்பேட்டை கிராமத்தில் உள்ள கலிகாமேஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது. பின்னர் பிரதோஷ நாயகர் வீதி உலா நடந்தது. நாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள நம்புவோருக்கு அன்பர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர். மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட ரிஷப தீர்த்த நந்தி பகவானுக்கு சனிப்பிரதோஷத்தையொட்டி அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கல்யாணசுந்தர குருக்கள் தலைமையில் காவிரி துலாக்கட்ட ரிஷப தீர்த்த நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.