6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சரக்கு வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சரக்கு வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x

சென்னை சின்னமலையில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சரக்கு வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை

'போர்ட்டர்' விளம்பர பலகையை வாகனத்தில் வைக்கக்கூடாது. டிரைவர்களை இடைநீக்கம் செய்யும்போது வாடிக்கையாளர்கள், டிரைவர்களின் ஆலோசனையை அறிய வேண்டும். மோட்டார் வாகன சட்டத்துக்கு புறம்பாக செயல்பட சொல்லி வற்புறுத்தக்கூடாது. வாகனங்களின் வாடகையை உயர்த்தி வழங்கவேண்டும்.

சரக்கு ஏற்றி செல்லும்போது வணிக வரித்துறையினரால் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டால் அதற்கு 'போர்ட்டர்' நிறுவனமே முழு பொறுப்பேற்க வேண்டும். ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட டிரைவர்களை மீண்டும் நிறுவனத்தில் இணைக்க வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 'போர்ட்டர்' செயலியில் பதிவு செய்து பணியாற்றும் சரக்கு வாகன டிரைவர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் அவர்களுடைய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. சென்னை சின்னமலையில் உள்ள 'போர்ட்டர்' நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச்செயலாளர் குப்புசாமி, சி.ஐ.டி.யு. மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன், உரிமைக்குரல் டிரைவர் தொழிற்சங்க மாநிலத்தலைவர் சுடர் வேந்தன், பொதுச்செயலாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் ஆட்டோ, கால் டாக்சி டிரைவர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


Next Story