கோமாதா பூஜை
கம்பம் வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் கோமாதா பூஜை நடந்தது.
தேனி
கம்பம் நவநீதகிருஷ்ண யாதவ மடலாய வளாகத்தில் வேணுகோபால கிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், மார்கழி மாதம் 1-ந்தேதி முதல் தினமும் அதிகாலையில் பஜனை மற்றும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அதன்படி மார்கழி 28-ந்தேதியான நேற்று அதிகாலை கோமாதா பூஜை நடந்தது.
பூஜையையொட்டி திருப்பாவையில் உள்ள 28-வது பாடலான 'கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்' என்று தொடங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்தனர். பின்னர் வேணுகோபாலகிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முன்னதாக கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்ட பசு மற்றும் கன்றுக்குட்டிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, மாலை சூட்டி, அலங்காரம் செய்து பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story