மதுரை மீனாட்சி அம்மனுக்கு 29½ பவுன் எடையில் தங்கக்கிளி


மதுரை மீனாட்சி அம்மனுக்கு 29½ பவுன் எடையில் தங்கக்கிளி
x

மதுரை மீனாட்சி அம்மனுக்கு 29½ பவுன் எடையில் தங்கக்கிளி வழங்கப்பட்டது

மதுரை


உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமில்லாமல், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் உண்டியலில் பணம் மற்றும் நன்கொடைகளை வழங்கி வருகிறார்கள். அவ்வாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திருப்பதி கோவிலில் உதவி அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்ற நாகராஜராவ் மீனாட்சி அம்மன் கோவில் பக்தர்களின் வசதிக்காக ரூ.10 லட்சம் மதிப்புள்ள 20 நகரும் நிழற்குடை வழங்கினார்.

அதே போன்று சுமார் ரூ.1 கோடி மதிப்பில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் கடந்த வாரம் பக்தர்களுக்காக மீனாட்சி அம்மன் கோவில் ஆடி வீதிகளில் நிழற்குடையை அமைத்து கொடுத்தது. இந்த நிலையில் நேற்று சென்னையை சேர்ந்த ராஜரத்தினம், ரேவதி தம்பதியினர் மீனாட்சி அம்மனுக்கு 235 கிராம்(29½ பவுன்) எடையுள்ள தங்கக்கிளியை நன்கொடையாக வழங்கினார்கள். அதனை கோவில் பட்டர்கள் சிறப்பு பூஜை செய்து அம்மனுக்கு சாற்றினார்கள்.


Next Story