அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்


அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
x
தினத்தந்தி 16 July 2023 12:30 AM IST (Updated: 16 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

தென்காசி

கடையம்:

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கடையம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு சோனியா காந்தி பேரவை மாநில செயலாளர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் அழகுதுரை, மாவட்ட கவுன்சிலர் சுதா சின்னத்தம்பி, ஐ.என்.டி.யு.சி. மாரி கணேஷ், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மகளிர் அணி தலைவி சீதாலட்சுமி வரவேற்றார். ஐ.என்.டி.யு.சி. தேசிய பொதுச் செயலாளர் அமீர்கான், மாவட்ட துணை தலைவர் பாவூர் செல்வன், பொட்டல்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், மும்பை வி.பி. ராமையா சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

இதில் மாவட்ட துணை தலைவர் ஆதிமூலம், வட்டார துணைத் தலைவர் ராமச்சந்திரன், ராகுல் காந்தி பேரவை சிவா, ஐ.என்.டி.ய.சி. ஒன்றிய தலைவர் அருணாசலம், அந்தோணி சங்கரநாராயணன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட தலைவர் பைசல், ராகுல்காந்தி பேரவை வெள்ளத்துரை, வேலுச்சாமி, சுதர்சன், சாஸ்தா, கஜராஜா, தங்க பாரத், ராஜேஷ், செல்லப்பாண்டி, ஜெபராஜ், ராமசாமி, குத்தாலிங்கம் பிள்ளை, நைனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story