புவனகாந்தாரி அம்மன் கோவில் வருசாபிஷேகம்


புவனகாந்தாரி அம்மன் கோவில் வருசாபிஷேகம்
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் புவனகாந்தாரி அம்மன் கோவில் வருசாபிஷேகம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி செல்லப்பாண்டியன் நகர் மஹா புவன காந்தாரி அம்மன் கோவில் வருசாபிஷேக விழாவும், புவன வராஹி அம்மன் பிரதிஷ்டை விழாவும் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மங்கல இசையுடன் திருமுறை பாராயணம், சங்கல்பம், விநாயகர் பூஜை, புன்னியாவாசனம், கும்பபூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், ருத்ர ஹோமம், அஸ்திர ஹோமம், வராஹி மூல மந்திர ஹோமம் நடைபெற்றது. கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி தீபாராதனை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மன் சன்னதியில் சிறப்பு வழிபாடுகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டது.


Next Story