பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை


பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 23 Jun 2023 12:15 AM IST (Updated: 23 Jun 2023 5:06 PM IST)
t-max-icont-min-icon

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்தது.

தென்காசி

பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின்போது ஆடுகள் குர்பானி கொடுக்கப்படும். இதற்காக முஸ்லிம்கள் ஆடுகள் வாங்குவது வழக்கம். இந்த நிலையில் பாவூர்சத்திரம் பழைய காய்கறி சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை நடைபெற்றது. இதற்காக பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், கடையம், கல்லூரணி, ராமச்சந்திரபட்டணம், பொட்டல்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆடுகளை பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மொத்தம் சுமார் ரூ.1 கோடி வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story