50 பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்
குஜிலியம்பாறையில் 50 பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டது.
குஜிலியம்பாறை கால்நடை மருந்தகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 2-ம் கட்டமாக 50 பெண் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர்கள் திருவள்ளுவன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 50 பயனாளிகளுக்கு தலா 5 விலையில்லா ஆடுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பாளையம் தி.மு.க. பேரூர் செயலாளர் கதிரவன், முன்னாள் வேடசந்தூர் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், பேரூர் துணை செயலாளர்கள் பிரபாகரன், சம்பூரணம், குஜிலியம்பாறை ஒன்றிய முன்னாள் துணை தலைவர் ராஜமாணிக்கம், குஜிலியம்பாறை கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் சமீர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.